Thursday, February 14, 2013

காந்தி பிறந்த மண்ணில் அரசியல் அகதிகளாக இசுலாமியர்கள் ! இந்த மண்ணில் இரண்டாம் தர மக்களாக இசுலாமியர்கள் நடத்த பட வேண்டும் என்று பகிரங்கமா அறிவிப்பு செய்து அதை பரப்புரையும் செய்தவர்கள் வீர் சாவர்கர், கோல்வால்கர் உள்ளிட்ட ஹிந்து துவ விரும்பிகள் . இதை நிறைவேற்ற இந்தியா முழுவதும் மறைமுகமான அரசியல் நகர்வுகளை மதவாத அமைப்புகள் மேற்க்கொண்டு வருகின்றார்கள் என்பதை நாடு முழுவதும் நடக்கும் நிகழ்வுகள் நமக்கு உணர்த்திக்கொண்டு தான் இருக்கின்றது. இசுலாமியர்கள் அசாமில் 31 % , மேற்கு வங்காளத்தில் த்தில் 25 %, பீகாரில் 18 % , உத்திர பிரதேசத்தில் 19 % , என வாழ்ந்து வரும் நிலையில் அரசியலில் அவர்களுக்கு உரிய பங்கை அளிப்பது இல்லை என்றாலும் முழுவதுமாக புறம்தள்ளி விட்டு தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் தேர்தலை சந்திப்பது இல்லை . ஆனால் குஜராத் மண்ணில்10% வாழும் இசுலாமியர்கள் அரசியல் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்ன்றார்கள் . குஜராத்தில் மாநிலத்தில் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் ஒரு இசுலாமியர் கூட நாடாளமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்படவில்லை பாரதிய ஜனதா 2002 , 2007,2012 ஆகிய தேர்தல்களில் ஒரு இசுலாமியருக்கு கூட போட்டியிடும் வாய்ப்பினை வழங்கவில்லை. நரேந்திர மோடியோடு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து குஜராத் பரிவர்தன் கட்சி என்று தொடங்கிய கேசுபாய் பட்டேல், கூட இசுலாமியர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை .மக்கள் தொகையின் அடிப்படையில் குறைந்தது 18 தொகுதிகளாவது இசுலாமியர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும் ஆனால் ஒட்டுமொத்தமாக இசுலாமியர்களை புறக்கணித்து விட்டு (182 தொகுதிகள் )தேர்தலை சந்தித்த பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்று இருக்கிறது. மதசார்பற்ற கட்சி என்று தன்னை அறிவித்து கொள்ளும் காங்கிரஸ் , 7 தொகுதிகளை மட்டுமே இசுலாமியர்களுக்கு ஒதுக்கியது ஆனால் போட்டியிட்ட அந்த 7 தொகுதிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற முடிந்து இருக்கிறது . அகமதாபாத் பகுதியில் உள்ள தாரியாபூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கயாசுதின் சேக் , தன்னை எதிர்த்த பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரை விட 2621 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் . மற்றொரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பீர்சாடா ஜாவித் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரை விட5072 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் . இதை தவிர்த்து, போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறி முன்னால் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் சபீர் கபுலிவாலா தனித்து போட்டியிட அந்த தொகுதியில் காங்கிரஸ் அறிவிப்பு செய்த சமீர் கான் , பாரதிய ஜனதா கட்சி யின் வேட்பாளர் அசோக் பாட் என்பவரிடம் வெற்றி வாய்ப்பை இழக்க நேர்ந்து உள்ளது . ( சபீர் கபுலிவாலா பெற்ற வாக்குகள் 30,513 , சமீர் கான் பெற்ற வாக்குகள் 41,727 . அசோக் பாட் பெற்ற வாக்குகள் 48058) வெற்றி பெற்ற இரண்டு இசுலாமிய சட்ட மன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு 50 லட்சத்துக்கும் குறைவானது , குஜராத்தில் தொகுதி மறு சீர் அமைப்பிற்கு பிறகு நடத்தப்பட்ட முதல் (2012) தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது . காந்தி பிறந்த மண்ணில் ( குஜராத்) சிறுபான்மையினராக வாழும் மக்களை கொன்று குவித்ததோடு அவர்களை அரசியல் அகதிகளாக்கி வேடிக்கை பார்க்கும் நரேந்திர மோடிக்கு துணைபோகும் வகையில் தான் காங்கிரஸின் அரசியல் நகர்வுகளும் உள்ளது . . நரேந்திர மோடியை போல குஜராத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இனி காங்கிரஸ் கட்சியும் இசுலாமியர்களை தேர்தலில் புறக்கணிக்க வாய்ப்புண்டு . குஜராத்தில் நரேந்திர மோடி வெற்றி பெற்ற உடனே வாழ்த்து செய்தி அனுப்பி, தன்னுடைய பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டவரை ,அவரின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்து இருக்கும் தமிழகத்து முதல்வர் ஜெயலலிதா அவர்களும் மோடியை போன்று இசுலாமியர்களை புறக்கணித்தால் அதில் வியப்பு ஏதும் இல்லை . கடந்த (2009)நாடாளமன்ற தேர்தலில் 40தொகுதிகளில் ஒரு தொகுதி கூட இசுலாமியர்களுக்கு வழங்காமல் வேட்பாளர்களை அறிவிப்பு செய்து விட்டு பிறகு எதிர்ப்புகள் வந்த சூழலில் தான் ஒரு தொகுதியை இசுலாமியருக்கு ஒதுக்கியவர் ஜெயலலிதா. அதே வேளையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுக்கப்பட்ட இரண்டு பொதுதொகுதிகளில் ஒன்றை இசுலாமியருக்கும் , மற்றொன்றை பிற்படுத்தப்பட்ட சமுகத்தில் பிறந்தவருக்கும் ஒதுக்கியது விடுதலை சிறுத்தைகள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் . குஜராத்தில் ஏன் இசுலாமியர்களுக்கு பாரதீய ஜனதா கட்சி போட்டியிட வாய்ப்பு தரவில்லை ? என்ற குற்றசாட்டிற்கு எதிர்வரும் நாடாளமன்ற தேர்தலில் 4 அல்லது 5 தொகுதிகள் இசுலாமியர்களுக்கு ஒதுக்கப்படும் என நரேந்திர மோடி கூறி இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி மாநில சிறுபான்மையினர் பிரிவு பொறுப்பளர் மஹிபு பாலி பாபா விளக்கம் தருகிறார் .. ஓடுக்கப்படும் இசுலாமியர்கள் வாழும் குஜராத் இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலம் என்று சொல்லும் போதெல்லாம் , மஹிபு பாலி பாபா போன்றவர்களை அரசியல் படுத்த காந்தி பிறந்த மண்ணில் அரசியல் அகதிகளாக இருக்கும் எம் இசுலாமிய சொந்தங்களை மீட்க மீண்டும் பிறக்க மாட்டாரா பழனி பாபா என்றே தோன்றுகிறது . . அரசியல் அதிகாரம் கை மாற ஓடுக்கப்பட்டவ்ர்கள் நிலைமாற ஒன்று கூடுவோம் !!! அ .அசோக் பொது செயலாளர் , கூடு இயக்கம்

No comments:

Post a Comment