Thursday, February 14, 2013

தன்னை விட
பெரிய சுமையை
இழுத்துச் சென்ற
எறும்பு நீ.

எதற்கும்
யாருக்கும்
வளைந்து
கொடுக்காத
இரும்பு நீ.

புதைத்தாலும்
விதைத்தாலும்
துளிர்த்தெழும்
கரும்பு நீ.

அடிமைத்தளை
அறுக்க
அறப்போர்
நிகழ்த்திய
அரும்பு நீ.

வரலாற்று
குருடர்களின்
வம்புகளை
கேலி செய்த
குறும்பு நீ.

வந்தேறி
கும்பல்களின்
வன்முறைகளை
குறிவைத்து
தாக்கிய
அம்பு நீ.

உறைவிட்ட
வாளென
உன்
உரை வீச்சுகளால்
அவர்களை
கருவறுத்தவன் நீ.

இஸ்லாமிய
விருட்சங்களின்
இலட்சியக் கிளைகளை
படரவிட்டவன் நீ.

உன் மூச்சு
காற்று பட்டு
குளிர் காற்றும்
கனலாகி போனது.

உன் நிழலிலும்
நெருப்பிருந்தது.
நெருப்பு குளித்த
உன்னால்
நெருப்பிற்கும்
வியர்த்துப் போனது.

அக்கிரமத்தின்
அநீதியின்
பிடரிமயிரை
பிடித்து
உலுக்கியவன் நீ.

மக்களின்
உணர்ச்சிக்
கொம்புகளை
சீவிவிட்டவன் நீ.

வஞ்சகர்களின்
நெஞ்சு சுவர்களில்
சாட்டை எடுத்து
விளாசியவன் நீ.

எங்கள்
மனதில்
கலக விதையை
தூவி விட்டவன் நீ.

எங்கள்
உணர்வுகளை
செந்தழுலாக
கொழுந்துவிட்டு
எரிய
செய்தவன் நீ.

விடுதலை
வேட்கையால்
எங்கள் சிந்தை
அணு
ஒவ்வொன்றையும்
சிலிர்க்க
வைத்தவன் நீ.

உன் தேக்கு
மர தேகத்தை
தியாகத் தீயில்
பொசுக்கியவன் நீ.

வீரனுக்கு
விரனாய்
விழி நிறைந்த
தீரனாய்
முஜாஹித்களின்
தலைவனாய்
தீன்குலத்து
நாயகனாய்
புரட்சிப்
பெருந்தீயில்
குளித்து
எழுந்தவன் நீ.

காவியணிந்த
பாவிகளின்
கருவறைகளையே
கலங்கவைத்தவன் நீ.

சரித்திரத்தில்
சாகாவரம்
பெற்ற
சாதனையாளன் நீ.

கண்ணின் மனியாக
போற்றப்பட வேண்டிய
ஒரு பொக்கிஷத்தை
பொசுக்கிவிட்டார்கள்
பாவிகள்.

உன் பூத உடல்
சாய்ந்து
நீ சிந்திய இரத்தம்
காய்ந்து
ஒரு வருடம் தான்
ஆகின்றது.

ஆனால்
உன் வேர்களிலிருந்து
வீரியம் பெற்று
உன் தியாக
வெளிச்சத்திலே
பல புதிய
அக்கினிப் பூக்கள்
பூக்கத்
தொடங்கிவிட்டன.

உன் சுவாசக் குழலில்
சுடு மூச்சு
நின்று போனது
ஆனால்
ஆயிரமாயிரம்
அக்கினி குஞ்சுகள்
அவதரிக்க
ஆரம்பமாகிவிட்டன.

சத்தியத்திற்கும்
அசத்தியத்திற்கும்
இடையே
னீ தொடங்கிவைத்த
ஓயாத போர்
தொடர்கின்றது.

பாபா நீ
கண்ணுரங்கு
கவலைப்படாதே
உண் பயணம்
புதிய உற்சாகத்தோடு
புதிய பொலிவோடு
தொடர்கிறது.

No comments:

Post a Comment