Sunday, April 7, 2013


சதாம் உசேன் ஒரு வரலாறு!

30.12.06 அன்று இஸ்லாமிய மக்கள் கொண்டாடுகின்ற தியாகத் திருநாளின் (பக்ரீத் பண்டிகை) தொடக்க நாள் ஆகும். இந்தத் தியாகத் திருநாளில் முஸ்லீம்கள் ஆடு, ஒட்டகம் போன்றவற்றை பலி கொடுத்து கொண்டாடுவார்கள். ஆனால் இந்த நாளில் சதாம் என்கின்ற ஒரு சிங்கம் பலி கொடுக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக துணிந்து போராடிய ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் ஈராக்கிய பொம்மை அரசினால் தூக்கில் இடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சதாம் மீதான நீதிமன்ற விசாரணை ஒரு நாடகமாகவே நடந்தது. சதாமுக்கு ஆதரவாக பேசிய நீதிபதி மாற்றப்பட்டார். சதாமுக்காக வாதாடிய வக்கீல்கள் கொல்லப்பட்டனர். இப்படி விசாரணை நடந்த பொழுதே சதாமின் முடிவு தெரிந்து விட்டது. இன்று அவரை சட்டத்தின் பெயரில் கொலையும் செய்து விட்டார்கள்.
சதாம் குறித்து பல குற்றச்சாட்டுக்கள் உண்டு. அவரும் ஒரு அடக்குமுறையாளரே. சதாமின் 25 வருட ஆட்சியில் குர்திஸ் மக்களும், சியா பிரிவு முஸ்லீம்களும் பல அடக்குமுறைக்கு ஆளாகி உள்ளார்கள். ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டுள்ளார்கள். அதற்காக ஈராக்கிய மக்கள் சதாமுக்கு தண்டனை வழங்கி இருந்தால், அது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும். ஆனால் ஈராக்கிய மக்கள் சதாமை தண்டிக்கவில்லை. அமெரிக்காவே சதாமை கொலை செய்திருக்கிறது.
சதாம் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருப்பினும் இன்றைய உலக அமைதிக்கும், தேசங்களின் இறைமைக்கும், இனங்களின் விடுதலைக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் அமெரிக்காவை எதிர்க்கத் துணிந்த ஒரு மனிதராகவே பெரும்பாலான உலக மக்கள் அவரை நோக்குகிறார்கள். அவர்களுக்கு சதாம் ஒரு பெரும் வீரராகவே காட்சி அளிக்கிறார்.
ஒரு பகுதியினரால் வெறுக்கப்படுபவரும், மறுபகுதியினரால் வரலாற்றுநாயகனாக போற்றப்படுபவருமாகிய சதாம் படுகொலை செய்யப்பட்டது என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது? இதைப் பார்க்கு முன் சதாமின் வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.
சதாம் உசேன் 23 ஏப்ரல் 1937இல் திக்ரித்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அவர் பிறந்து சில மாதங்களிலேயே இவரது தந்தை தற்கொலை செய்து கொண்டார். சதாமின் தந்தை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உறுதியாக தெரியவில்லை. சதாமின் தாயார் அவரது கணவரை திருமணம் செய்வதற்கு முன்பே கர்ப்பமாகி விட்டார். இதனால் அந்தப் பகுதி மக்கள் சதாமின் பெற்றோரை மிகவும் அவமானப்படுத்தியும் கேலியும் செய்தார்கள். இதனால் மனமுடைந்த சதாமின் தந்தை தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இங்கே சதாமின் பிறந்த தினம் குறித்தும் ஒரு மர்மம் நிலவுவதை சொல்ல வேண்டும். இஸ்லாமிய மக்களின் பெரும் வீரராக போற்றப்படும் சலாவுதீனின் 800வது பிறந்த நாளும் சதாம் பிறந்த திகதியாக சொல்லப்படுகின்ற அதே நாளில் வருகிறது. சதாமின் எதிர்ப்பாளர்கள் இந்த பிறந்த தினம் சதாமினால் பொய்யான முறையில் அறிவிக்கப்பட்டதாக சொல்வார்கள்.
சதாமின் தாயார் சதாம் பிறந்த 9 ஆண்டுகள் கழித்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். சதாமை அவரது மாமனாரிடம் வளர்ப்பதற்கு தாயார் ஒப்படைத்தார். ஒரு சாதரண விவசாயியாக வந்திருக்க வேண்டிய சதாமின் வாழ்க்கையை இதுதான் மொத்தமாக புரட்டிப் போட்டது.
சதாமின் மாமனார் ஈராக்கின் இராணுவ அணி ஒன்றின் அதிகாரியாக இருந்தார். அப்பொழுது ஈராக்கில் மன்னராட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். மன்னருக்கு எதிரான புரட்சியில் சதாமின் மாமா இடம்பெற்றிருந்த இராணுவ அணி பங்குபற்றியது. புரட்சி தோல்வியில் முடிந்தது. சதாமின் மாமாவுடன் புரட்சி செய்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சில ஆண்டுகள் கழித்து சதாமின் மாமா விடுதலை செய்யப்பட்டார்.
இவ்வாறு அரசியலிலும் ஆட்சியிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த மாமாவுடன் வளர்ந்த சதாமையும் அரசியல் ஈடுபாடு தொற்றிக் கொண்டதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.1955இல் சதாம் பக்தாத்திற்கு சென்றார். அங்குதான் சதாமின் திருமணமும் நடந்தது.
1956இல் தடை செய்யப்பட்டிருந்த பாத் கட்சியில் சதாம் இணைந்து கொண்டார். இந்தக் கட்சி ஈராக்கின் மன்னரை கவிழ்ப்பதற்கு தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தது. ஈராக்கின் மன்னரான இரண்டாவது பைசால் மேலைத்தேய சார்பு உடையவராக இருந்தார். இதனால் இவரை ஆட்சியை விட்டு அகற்றுவதற்கு அவருடன் இருந்த அதிகாரிகளும் ஆதரவாக இருந்தார்கள்.
1958இல் ஈராக் மன்னரை எதிர்த்து அவரது இராணுவ அதிகாரிகள் புரட்சி செய்தனர். மன்னர் கைது செய்யப்பட்டார். அவரும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர். ஈராக் மன்னரின் ஆடைகளற்ற உடல் ஈராக்கின் தெரு ஒன்றில் வீசப்பட்டு கிடந்தது. இந்தப் புரட்சிக்கு சதாம் அங்கம் வகித்த பாத் கட்சியும் துணை நின்றது.
மன்னர் ஆட்சி இவ்வாறு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதும், புரட்சியை முன்னின்று நடத்திய இராணுவ அதிகாரிகளே ஆட்சியை அமைத்தனர். புரட்சிக்கு தலைமை தாங்கிய அல்கரீம் குவாசிம் என்பவர் ஈராக்கின் பிரதமராக பொறுப்பேற்றார்.
மன்னராட்சியை கவிழ்ப்பதற்கு குவாசிமுக்கு பாத் கட்சி துணை புரிந்தாலும், பாத் கட்சியின் நோக்கம் என்பது ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது என்பதாகவே இருந்தது. இதனால் பாத் கட்சி குவாசிமின் ஆட்சியையும் கவிழ்ப்பதற்கு பல முறை முயன்றது. குவாசிமை கொல்வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகளில் சதாம் தீவிரமாக பங்கேற்றார்.
1959இல் மேற்கொள்ளப்பட்ட குவாசிமுக்கு எதிரான சதி முயற்சி தோல்வியில் முடிந்தது. இதை அடுத்து சதாமை ஈராக் அரசு வலைவீசி தேடியது. சதாம் முதலில் சிரியாவிற்கும் பின்பு அங்கிருந்து எகிப்திற்கும் தப்பிச் சென்றார். பல நூற்றுக் கணக்கான மைல்கள் அவர் கழுதையின் மீது அமர்ந்தே தப்பிச் சென்றார். ஈராக்கில் சதாம் இல்லாமலேயே விசாரணைகள் நடைபெற்று, அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
எகிப்திற்கு தப்பிச் சென்ற சதாம் அங்கு கைரோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை மேற்கொண்டார். கைரோவில் இருந்த பொழுதே அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ உடன் சதாமுக்கு தொடர்புகள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நேரத்தில் பாத் கட்சியின் தலைமையிலும் மாற்றம் ஏற்பட்டது. சதாமின் தூரத்து உறவினர் ஒருவர் பாத் கட்சியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது பிற்காலத்தில் சதாம் கட்சிக்குள் முக்கியத்துவம் பெறுவதற்கு மேலும் உதவியது.
1963இல் குவாசிமின் ஆட்சியை பாத் கட்சி வெற்றிகரமாக கவிழ்த்தது. குவாசிம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொல்லப்பட்டார்கள். சதாம் மீண்டும் ஈராக் திரும்பினார். 1964இல் பாத் கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது. எதிரணியினர் ஆட்சியைக் கைப்பற்றினர். சதாமுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் சதாம் தப்பிச் சென்றுவிட்டார்.
1968இல் சதாம் இருந்த அணி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. இதன் பிறகு சதாம் மிக வேகமாக உச்சிக்கு சென்றார். யாரும் நெருங்கமுடியாத உச்சத்தை தொட்டார்.
பாத் கட்சியின் ஆட்சியில் 1968இல் பாதுகாப்பு, பரப்புரை அமைச்சுக்களின் தலைமைப் பொறுப்பை ஏற்ற சதாம் 1969இல் உபஜனாதிபதியாக ஆனார். உபஜனாதிபதியாக இருந்த சதாம் 1973இல் ஈராக் இராணுவத்தின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். இப்படி அரசு, இராணுவம் என்ற இரண்டு அதிகார மையங்களிலும் செல்வாக்குப் பெற்ற சக்தியாக இருந்த சதாம் 1979இல் பாத் கட்சியின் தலைவராக ஆனதோடு அதே ஆண்டு ஈராக்கின் ஜனாதிபதியாகவும் ஆனார்.
1969இல் இருந்து 1979இல் சதாம் ஈராக்கின் ஜனாதிபதியாகும் வரை அவர் தன்னுடைய கட்சிக்குள் இருந்த எதிரிகளிடம் இருந்து பல நெருக்கடிகளை சந்தித்தார். இந்த எதிரிகளை எல்லாம் சதாம் ஈவிரக்கமின்றி தீர்த்துக் கட்டினார். சதாமுக்கு போட்டியாக வரக்கூடியவர்கள் திடீர் திடீர் என்று காணாமல் போனார்கள். இப்படி ஒருபுறம் சதிகளை செய்தும், மறுபுறம் சதிகளை முறியடித்துமே சதாம் ஈராக்கின் ஜனாதிபதியாக வந்தார்.
1980இல் ஈரானுடன் சதாம் நடத்திய போர் அவரை உலகம் அறியச் செய்தது. இந்தப் போரில் சதாமுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முழு ஆதரவை வழங்கின. சதாமுக்கு நச்சு ஆயுதங்களையும் வழங்கின. இன்றைக்கு சதாம் எந்தக் குற்றச்சாட்டுக்களின் பேரில் கொல்லப்பட்டாரோ, அன்று அந்தக் குற்றங்களை ஆதரித்து நியாயப்படுத்தியது இந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்தான்.
(தொடரும்)

Thursday, February 14, 2013

பழனி பாபாவும் விமான பனிப் பெண்ணும்

பழனி பாபாவும் விமான பனிப் பெண்ணும்.

ஆகாயத்திலே நடந்த உண்மை.

சஹித் பழனி பாபா அவர்கள் Gulf Air மூலமாக இலங்கையிலிருந்து பஹ்ரைனுக்கு பயணம் செய்யும் போது முதல் வகுப்பு இருக்கையில் நடந்த உரையாடல்கள் விமானப் பனி பொன்னுவுடன்.

பைபிளை எடுத்து வைத்துப் படிக்கிறேன்.நான் பெரும்பாலும் அரபி உடைகளையே விரும்பி அணிவேன்.மேலொட்டமாய்ப் பார்த்தாலும் கிறிஸ்துவ தோற்றம்.தலையை மூடியிருப்பதைக் கண்டால் முஸ்லிமின் வடிவம்.20 நிமிடம் கழித்து பயணிகள் அதிகமில்லாததால் பணிப்பெண் வந்து பணிவிடைகளை முடித்து விட்டு என் தேவைகளுக்காக நின்றவர் நீண்ட நேரம் குழம்புகிறார்.
பின்னர் மெதுவாய் fபாதர் நீங்கள் கிறிஸ்துவரா?முஸ்லிமா? என்று நான் தெரிந்து கொள்ளலாமா? என்கிறார்.

"ஆட்சேபகரமற்று நான் ஒரு முஸ்லிம்" என்றேன்.

"முஸ்லிம் கையில் பைபிளா?
ஏனிந்த மாற்றம்? எப்படி வந்தது இந்த ஆகர்ஷனம் (Attraction?
பைபிளின் புனிதம் இப்படி மாற்றங்களை ஏற்படுத்துவதுதான்! தேவனின் மகிமையை என்னென்பேன். ஒ! ஜீஸஸ்" கண்களில் நீர்த்துளிகள். மெய்சிலிர்க்கப் பேசுகிறார்.

அவரின் ஆதங்கம் தணியும் வரை நான் மவுனமாயிருக்கிறேன். பிறகு மெதுவாய்ப் பேசினேன்.

"சகோதரியே! உங்கள் வயது?"
"22 வயது"

" எனக்கு 38 வயது ஆகிறது. நீங்கள் பைபிளை எத்தனை வருடமாய் படிக்கிறீர்கள்?"

" சிறு வயது என்றால், சுமாராக எத்தனை வயதில்?"
" 12 வயது முதல்!"

" அப்படியானால் 10 வருடமாய் படிக்கிறீர்கள்- நான் எனது 15 வயது முதல் இன்று 23 ஆண்டுகளாய் படிக்கிறேன்.!"

" நானும் ஐந்து ஆறு வருடமாய் தீவிரமாய் படிக்கிறேன்!"

" நீங்கள் - புராட்டஸ்டண்டா - கத்தோலிக்க்ரா? பியூரிட்டடா - கிறிஸ்துவரின் எப்பிரிவு?

" நான் ரோமன் கத்தோலிக்!"

" வெரிகுட்! உங்களுக்குள் இத்தனைப் பிரிவுகளும் ஒரே பைபிளை கடைப்பிடிக்கிறீர்களா?"

" இல்லை . நான் தேர்ந்தெடுத்தது K.J.V (King James) வர்ஷன்."

" பைபிளை எழுதியது யார்?"

" யார் சொன்னது எழுதியது என்று? பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டது?".

" யார் மூலமாக?"

" ஏசுநாதர் (ஈஸா நபி) மூலமாக!"

" அப்படி என்றால் அதற்கு முன் பைபிள் இல்லையா?"

" அதன் பெயர் பழைய ஏற்பாடு (Old Testament) "

" ஏசுநாதர் தான் இதை அருளினார் என்று பைபிளில் எங்கே போட்டுள்ளது?
நான் தான் கடவுள்; என்னையே வணங்குங்கள்; என்று ஏசு எங்காவது ஓரிடத்தில் சொல்லி உள்ளாரா?"

" பார்த்துத் தான் சொல்ல வேண்டும்."

" சரி போகட்டும் என் சகோதரியே!

ஒரு புனித நூல் என்றால் - கடவுளிடமிருந்து இறங்கியது என்றால், அதில் முரண்பாடுகள் இருக்கக் கூடாதல்லவா?"

" கட்டாயமாக!"

" இறங்கியது முதல் அது உருமாறாது யாராலும் திருத்தப்படாது, அப்பழுக்கற்று அப்படியே இருக்க வேண்டுமல்லவா?"

" நிச்சயமாக!"

" சகோதரியே! எல்லா சுவரிலும் எல்லாச் சர்ச்சுகளிலும் பொதுவாக என்ன எழுதி உள்ளது? ஏசு எதற்காக இப்பூவுலக்கு வந்தார்?"
" ஏசு சமாதானத்தை போதிக்க வந்தார் என்று எழுதியுள்ளது. ஏசு சமாதானத்தையே விரும்பினார் என்று நாங்களனைவரும் ஏற்றுக் கொள்கிறோம்."
" சகோதரியே, பைபிளில் என்ன போட்டுள்ளது பாருங்கள்."
என்கையிலுள்ள பைபிளை தருகிறேன்.

49. பூமியின் மேல் அக்கினியைப் போட வந்தேன், அது அப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.

51. நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தை அல்ல. பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.

52. எப்படியெனில், இது முதல் ஒரே வீட்டில் ஐந்து பேர் பிரிந்திருப்பார்கள், இரண்டு பேருக்கு விரோதமாய் மூன்று பேரும் மூன்று பேருக்கு விரோதமாய் இரண்டு பேரும் பிரிந்திருப்பார்கள்.

53. தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும், மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.
லூக்கா - 12:49,51,52,53

34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள். சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.

35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும் மகளுக்கும் தாய்க்கும் மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
மத்தேயு - 10:34,35
ஏசுவின் வரிகளைச் சுட்டிக்காட்டியதும், பைபிளை என் கையிலிருந்து பிடுங்கி மேற்படி வசனங்களை திரும்பத் திரும்ப படிக்கிறார்.

முகம் சிவக்க,மனம் குழப்ப,புருவம் நெளிய தயவுடன் கொஞ்சம் இருங்கள்!(Excuseme) எனக்கூறிவிட்டு நெரெ(Cabincrew) பணிப்பெண்கள் அறை நோக்கிச் சென்று தனது பைபிளை எடுத்து புரட்டுகிறார். அட்டை, விலாசம்,அடிக்கப்பட்ட இடம் இவைகளை சரிப்பார்க்கிறார். இரண்டும் ஒன்று தான். வாசகங்களும் ஒன்றே! ஒரு பாட்டில் நீர் கொண்டுவந்து முழுவதும் குடிக்கிறார், வியர்வைத் துடைக்கிறார், சோர்ந்து அமர்கிறார், தன் கண்களையே நம்ப முடியாது தவிக்கிறார்.

அவரின் குழப்ப நிலையைக் கண்ட நான் " என்ன அன்புச் சகோதரியே! தங்கள் மனம் புண்படும்படி நான் ஏதாவது கூறியிருந்தால் மன்னியுங்கள். எனக்கு உங்கள் வயதில் சகோதாரிகளுண்டு.என் கருத்தை நான் கூறவில்லை. பைபிளில் உள்ளதையே எடுத்து வைத்தேன்! பாவம் உங்கள் 10 ஆண்டு பைபிளின் பாசத்தை நான் சிதைத்து விட்டேனா?"

' இல்லை சார், எனக்கு அதிர்ச்சியாய் உள்ளது! எப்படி இப்படி எழுதப்பட்டுள்ளது? யார் இப்படி செய்தது? என்னால் நம்ப முடியவில்லை!'

" சகோதரியே,அதை முஸ்லிம்களோ இந்துக்களோ செய்யவில்லை, செய்யவும் முடியாது. இதை சரிபார்த்தவர்கள் லிஸ்ட்டில் 32 மேதாவிகள் (Bible Scholars and 52 Demominations) 52 - உயர் பாதிரிஸ்தானிகர்கள் கூடி சரிப்பார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதனால் மொழிபெயர்ப்பில் கோளாறு இல்லை. அப்படிக் கருத்தில் கொண்டாலும் இதோ தழிழ் பிரதி, இதுவும் அப்படியே! இதோ அரபிப்பிரதி" (தனக்கும் அரபி தெரியும் என்று வாங்கிப் படிக்கிறார்) ஆமோதிக்கிறார்.

" சகோதரியே! ஏசுநாதர் பேசிய மொழி என்ன?"

" அராமிக் (ARAMIC)"

" பைபிளிம் மூலப்பிரதி எந்த மொழியில் இருந்தது?"

" ஹிப்ரு (HEBREW)"

" தற்போது அராமிக் மொழியும் வழக்கில் இல்லை, மூலப்பிரதியும் காணாது போய்விட்டது."

" அராமிக் வழக்கில் இல்லை - பைபிளின் மூலப்பிரதி காணாது போய்விட்டது என்று யார் சொன்னது?"

" பைபிளே சொல்கிறது."

கடைசியில் திறந்து Summary of the book of the bible ( நூல் வரலாறு)K.J.V என்ற தலைப்பின் கீழ்: அதில் உள்ள வாசகம் இதோ!

NEW TESTAMENT

The New Testament, Which has a total of twenty seven Books, being with the four Gospels, which record the life and teachings of christ from four different view points Although the Originai autograph No Longer Exist.

27 புத்தகங்களைக் கொண்ட புதிய ஏற்பாடானது 4 சுவிஷேஷங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு ஏசுநாதரின் வாழ்க்கை மற்றும் போதனைகளை நாலு கோணங்களில் பதிவு செய்கிறது. அதன் மூலப்பிரதி காணாமல் போய்விட்டதால்...

" சகோதரியே, நிலைமை இப்படி இருக்க நீங்கள் எதைவைத்து இதை நிருபிப்பீர்கள்? கடவுளால் அருளிய வேதம் காணாமல் போனதா? எப்படிச் சகோதரியே நம்புவது? காலம் காலமாய் கடைசி நாள் கியாமத் (Day of Judgemant) வரை வழிகாட்ட வேண்டிய நூல் எங்கோ வழி தவறினால், அதைப் பின்பற்றினால் என்ன நிலைமை?

குருடன் குருடனுக்கு வழிக்காட்டினால் நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா? அதுவும் வழிகாட்ட வந்த முதல் குருடனே காணாது போன பின்,அடுத்தவன் அழைக்கிறான் -வாருங்கள் அவன் காட்டிய பாதையில் நான் கூட்டிச் செல்கிறேன் " ஏசு அழைக்கிறார்" என்று கூப்பாடு போட்டால் எப்படியம்மா ஏற்றுக் கொள்வது?

நான் பரந்த மனதுடனே கேட்கிறேன் எது சரி - சகோதரியே?

பிறகு, ஏசுவை நீங்கள் என்னவென்று நினைக்கிறீகள்?" என்றேன்.

" அவரே கடவுள் என்று எண்ணி வழிபடுகிறேன்" என்றார்.

" சரி - அவர் கடவுள் என்றால் ,எதை வைத்து அவரைக் கடவுள் என்கிறீர்கள்?"

" ஒரே வரி உலகில் யாருமே உடலுறவற்று பிறக்கவில்லை. அவரே - அவர் மட்டும் தந்தையற்று பிறந்துள்ளார்".

" தந்தை இல்லாது பிறந்ததனால் மட்டுமே அவர் இறைவன் என்றால் அதே பைபிளில் வரும் ஆதம் - ஏவாள் (ADAM & EVE) தாயுமற்று தந்தையுமற்று பிறந்துள்ளானரே! அவர்களை எப்படி அழைப்பது Super God என்றா?
ஆரம்பமும் அற்று முடிவும் அற்று,தாயும் இன்றி தகப்பனும் இன்றி, வம்ச வரலாறு,வம்ச வழியும் இன்றி,சமாதானத்தின் ராஜா மெல்கிதேக்கு(Kings of Peace)என்றழைக்கப்படும் தீர்க்கதரிசி பற்றி பைபிளின் எபிரெயருக்கு எழுதின நிருபத்தில் வருகிறதே - அதிகாரம் 7:2 முதல் 4வது வசனம் வரை - அவரை ஏன் கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லை?

ஏசுநாதரே கடவுள் என்றால்,அவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படும் 3 நாள் இப்பூலகையும், கோள்களையும் வான்களையும் ஜீவராசிகளையும் யார் கவனித்துக் கொண்டது?

அவரது தாயின் வயிற்றில் 10மாத வளர்ச்சியின் போது உலகையாரம்மா கவனித்துக் கொண்டது?

நாத்திகனுக்கு இவைகள் நல்ல பிடியாகி விட்டதே!

ஏசுநாதரின் கடைசி வார்த்தைகள் என்ன என்று பைபிள் சொல்கிறது?

ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு " ஏலோயீ! ஏலோயீலாமா சபக்தானி" என்று மிகுந்த சப்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு 'என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று அர்த்தமாம்.
மாற்கு 15:34

அவரே தேவன் (கடவுள்) என்கிறீர்கள். ஆனால் அவரே 'என் தேவனே! என் தேவனே!! ஏன் என்னைக் கைவிட்டீர்' என்கிறார். யாரையம்மா அழைத்தார்? தன்னைத் தானே அழைத்தாரா? ஏனிந்த குழப்பம்?"

மவுனம் பதிலாய் உள்ளது.

" கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கப்பெறும் என்று மத்தேயூ - 7:7ல் கூறியுள்ளப்படி நாம் கேட்டு கடவுளிடமிருந்து கிடைப்பது ஒரு பக்கமிருக்கட்டும். இவர் கேட்டே கிடைக்கவில்லையே! எப்படியம்மா இவர் பேச்சை நாம் கேட்பது என்று எந்த பாமர மகனும் யோசிப்பானல்லவா?"

இதற்கும் அச் சகோதரியிடமிருந்து மவுனமே பதிலாய் வந்தது.

" ஒரு புனித நூல் அனாச்சாரங்களுக்கும் அசிங்கங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்க வேண்டுமல்லவா? யாரோடும் ஆண், பெண் பேதமின்றி, பகிர்ந்து அர்த்தத்துடன் படிக்க வேண்டுமல்லவா? ஒரு புனித நூலை ஓதும்போது மனது கலக்கமோ, தயக்கமோ இன்றி உள்ளம் தெளிவடைய வேண்டுமல்லவா? மாறாக குழப்பமோ குதர்க்கமோ ஏற்பட்டால் அது புனித நூலாகாதல்லவா?"

" ஆமாம்!"

" சரி, சகோதரியே! நீங்கள் குளிக்கும்போது நான் மாடியிலிருந்து பார்ப்பது கூடுமா?"

" தண்டனைக்குரிய குற்றம்"

" சாதாரண மனிதனான எனக்கே கூடாது என்றால் இறைநேசச் செல்வர்கள் இதைச் செய்யலாமா?"

" யார் செய்தாலும் மிகப் பெரிய தண்டனை தரப்பட வேண்டும்".

" அப்படியானால் டேவிட்டை ஏன் தன்டிக்கவில்லை?"

" எந்த டேவிட்?"

(DAVID தாவூது) பைபிளில் வரும் ஏசுவின் முன்னோர்கள், ஏசுவின் பரம்பரை பட்டியலில் முதல் இடம் வகிப்பவர்!" (Genealogy)

" எங்கே போட்டுள்ளது?"

" இதோ - சாமுவேல் - அதிகாரம் - 11"
II Samuel - Chapter II version: 2 to 5

அதிகாரம் பதினொன்று சாமுவேல்

2. ஒரு நாள் சாயங்காலத்தில் தாவீது ( டேவிட் ) தன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை உப்பரிகையின் மேல் உலாத்திக் கொண்டிருக்கும் போது ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான். அந்த ஸ்திரீ வெகு செளந்தரவதியாயிருந்தாள்.

3. அப்போது தாவீது அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். அவள் எலியாமின் குமாரத்தியும், எத்தியனான உரியாவின் ம்னைவியுமாகிய பத்சேபாள் - என்றார்கள்.

4. அப்போது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான், அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோட சயனித்தான். பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக் கொண்டு தன் வீட்டுக்குப் போனாள்.

5. அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினான்.

" போதும் நிறுத்துங்கள் சகோதரியே! ஒரு நபி - ஒழுக்கத்தை போதிக்க வேண்டியவரே - விபச்சாரம் அதுவும் பிறன் மனைவி என்று விசாரித்து தெரிந்து இந்தத் தவறை செய்துள்ளார்.

" அதன் பின்னால் உரியாவை ( பத்சேபாளின் கணவனை) பின்னர் கொலை செய்ய திட்டமிட்டு முடிக்கிறார்.

இதுதான் பைபிளின் லட்சணமா ?

சிந்தியுங்கள் பிறகு முடிவெடுங்கள்.

இஸ்லாம் உங்களை கட்டாயப் படுத்தி அழைக்கவில்லை சிந்தித்து முடிவு எடுக்க சொல்கிறது கிறித்துவர்களே என்னை நம்பாதிர்கள் நான் ஒரு ஆடு மேய்த்தவன் என்னைக் கர்த்தர் என்றும் ராவுத்தர் என்றும் அழைக்காதிர்கள் படைத்தவன் எவனோ அவனையே வழி படுங்கள் அல்லாஹ் ஒருவனே கடவுள் அவனுக்கு நிகரா எவனும் இல்லை.

போராளி பழனி பாபா ஒரு பார்வை!


ஒடுக்கப்பட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைக்காக தம் வாழ்நாள் முழுவதும் போராடிய பழனி பாபா ஜனவரி 28(28.1.1997) சங்கபரிவார வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட நாள்.
-காஞ்சி ஜைனுல் ஆபிதீன்
மாநில மாணவரணி செயலாளர்.தமுமுக
பழனி அருகே புது ஆயக்குடி எனும் கிராமத்தில் வசதி மிக்க குடும்பத்தில் பிறந்து தம் சிறந்த ஆங்கில அறிவாலும் நாவன்மையாலும் பல அரசியல் கட்சி தலைவர்களின்,முக்கிய பிரமுககர்களின் நட்பை பெற்றவர் பாபா.முதலில் எம்ஜிஆருக்கு ஆதரவாகவும் பின்னர் கருணாநிதிக்கு ஆதரவாகவும் அரசியல் பணியாற்றினார். பின்னர் பாமகவின் ராமதாசுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்து பாமகவை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்றார்.வன்னியர் கட்சியான பாமகவை அணைத்து மக்களுக்குமான கட்சியாக ஜனரஞ்சகமாக்கிய பெருமை பாபாவுக்கே உரியது.ஜிஹாத் கமிட்டி என்ற பெயரில் ஒரு அமைப்பையும் உருவாக்கினர்.
முஸ்லிம் சமுக இளைஞர்களிடத்தில் அவருக்கு இருந்த செல்வாக்கு வேறு எந்த தலைவருக்கும் இருந்ததில்லை.பார்பன அதிகார வர்க்கத்துக்கும் முஸ்லிம்களை ஏமாற்றி வந்த அரசியல் கட்சிகளுக்கும் தனது சட்ட அறிவின் மூலமும் பேச்சாற்றல் மூலமும் தகுந்த பதிலடி கொடுத்து வந்த பாபா சங்க பரிவார பாசிஸ்டுகளுக்கு சிம்ம சொப்பனமாகவே விளங்கினார்.
தமிழகத்தில் பட்டி தொட்டி முதல் மாநகர் வரை அவர் பேசாத இடம் இல்லை.கேரளா,மும்பை உட்பட இந்தியாவின் பிற பகுதிகளிலும் இலங்கை,சிங்கபூர்,மலேசியா என பல நாடுகளிலும் சுற்றுபயணம் மேற்கொண்டு சமூகத்தின் பிரச்சனைகளை பேசினார். இன்றைக்கு பெரும்(?) செல்வாக்குள்ள முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் பேச பயந்த விசயங்களை அன்றைக்கு பொது மேடைகளிலேயே போட்டு உடைத்தவர் பாபா.முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது இழைத்தவன் சாதாரண கான்ஸ்டபிளாக இருந்தாலும் எஸ்.பியாக இருந்தாலும் எவ்வளவு பெரிய அரசியல் தலைவராக இருந்தாலும் துணிந்து அவர்களின் முகமூடியை கிழிக்க அவர் என்றும் தயங்கியதே இல்லை.
இன்றைக்கு முஸ்லிம் சமூக தலைவர்கள் தங்கள் அறைகளில் பேச தயங்கும் பல விசயங்களை பொது மேடைகளில் நார் நாராய் கிழித்தவர் அவர்.அதனால் அதிகார வர்க்கத்தின் ஆளும் கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதித்தார்.கருணாநிதி,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா என அனைவருமே பாபாவின் துணிச்சலான கருத்துகளுக்காகவும் முஸ்லிம் விரோத போக்கினாலும் அவரை பலமுறை சிறையில் அடைத்தனர்.
ஆர் எஸ் எஸ் ,இந்து முன்னணி போன்ற அமைப்புகளின் முஸ்லிம் விரோத போக்கை ஆசிர்வதித்தும் கண்டும் காணாமலும் இருந்த அன்றைய காவல்துறையையும் அரசியல்வாதிகளையும் தனது நெருப்பு பேச்சால் சுட்டெரித்தார்.இதனால் முஸ்லிம் சமூகம் சிந்தனை பெற்றதோ இல்லையோ முஸ்லிம் இளைஞர்கள் கொதித்து எழுந்தனர்.
சங்பரிவாரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முஸ்லிம் இளைஞர்களால் உடனடி பதில் அளிக்கப்பட்டது.இதனால் அடங்கி,பயந்து போன பாசிச கும்பல் அதிகார வர்க்கத்தின் துணையை நாடியது.இதனால் பல முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்தது.சிறையில் அடைக்கப்பட்ட பலருக்கு சட்ட உதவிகள் செய்தார் பழனி பாபா.ஒரு கட்டத்தில் பொய் வழக்குகள் பாபா மீதே பாய ஆரம்பித்தன.அனைத்தையும் எதிர் கொண்டார்.
முஸ்லிம் தலைவர்கள் இன்றும் கூட சிறைக்கஞ்சி பதுங்கும் நேரத்தில் சிறைக்கு போவதை பெருமையாகவே நினைத்தார் பாபா.சமுதாய இளைஞர்களுக்கு சிறையின் மேல் இருந்த பயத்தை போக்கினார்.போராளிகளின் புகலிடம் சிறைசாலை என்று போதித்தார்.ஆனால் பாபா முஸ்லிம் இளைஞர்களை வழி கெடுக்கிறார் என்று தூற்றினர் சில சிறைக்கஞ்சா(?) தலைவர்கள். அதையும் மீறி இளைஞர்களின் பேராதரவோடு களப்பணி ஆற்றினார்.
சங்பரிவார் அமைப்புகளின் எதிர்ப்புக்கிடையில் பல தாழ்த்தப்பட்ட மக்களின் இஸ்லாமிய தழுவலுக்கு வழி வகுத்தார் பாபா.இஸ்லாம் ஒன்றே சாதிய ஒடுக்குமுறைக்கு தீர்வு என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழி காட்டினர்.அதனால் பல தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் இஸ்லாமிய நெறி ஏற்றிட உதவி செய்தார்.இஸ்லாமிய தாவா மட்டுமல்ல முஸ்லிம் சமூகத்தில் புரயோடிபோயிருந்த வரதட்சணை,வட்டி போன்ற சமூக கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்.சந்தன கூடு,சமாதி வழிபாடு என்று தறிகெட்ட முஸ்லிம்களுக்கும் சவுக்கடி கொடுத்தார் பாபா.
இதனால் முஸ்லிம்களின் ஒரு பிரிவினரின் கோபத்தை சம்பாதித்தார்.அதற்கெல்லாம் அஞ்சாமல் தனது கருத்துகளை ஜமாத்தார்கள் முன்னிலையிலேயே எடுத்து வைத்தார்.பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்களுடன் நட்புறவு பேணி முஸ்லிம் மற்றும் இந்து சமுதாய ஒருங்கிணைப்புக்கு வழி வகுத்தார்.பல மனித உரிமை போராளிகளோடு இணைந்து போராட்ட களங்கள் கண்டார்.பேரா.கல்யாணி,டாக்டர் சேப்பன் போன்றவர்களோடும் PUCL போன்ற மனித உரிமை அமைப்புகளோடும் இணைந்து உரிமைகள் மறுக்கபட்டோருக்கு உதவி செய்தார்.
அரசியல்,சமூக பணிகளோடு இஸ்லாமிய மார்க்க விளக்கத்திலும் சிறந்த அறிவு பெற்றிருந்தார் பாபா.பல இஸ்லாமிய கொள்கை விளக்க கூட்டங்களில் பேசினார்.சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் தனது இஸ்லாமிய கருத்துகளை எடுத்து வைத்தார்.கிறிஸ்துவம் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார்.பைபிள் மற்றும் கிறிஸ்தவம் தொடர்பாக அவர் கேட்ட அறிவு ரீதியான கேள்விகளுக்கு கிருஸ்தவ பாதிரிமார்களால் பதில் அளிக்கவே முடியவில்லை .அவரின் பைபிள் ஒரு ஆய்வு கிருஸ்தவத்திலும் பைபிளிலும் பாபாவுக்கு இருந்த ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்திய நூல்.ராமகோபலய்யருக்கு மறுப்பு நூலும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த புத்தகம் எழுதிய பாபா கைது செய்யப்பட்டது அன்றைக்கு அரசுகள் முஸ்லிம்கள் மீது நடத்திய அடக்கு முறைக்கு ஒரு சான்று.தான் நூல்கள் எழுதியது மட்டுமல்லாமல் இஸ்லாம் குறித்து மற்ற அறிஞர்கள் எழுதிய நூல்களுக்கும் உதவி செய்தார் பாபா.பேரா.மார்க்ஸ் எழுதிய முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுகதைகள் என்ற புத்தகம் வெளியிட நிதியுதவி அளித்தார்.பாபரி மஸ்ஜித் தொடர்பாக WHO IS LAW ABIDING ON THE ISSUE OF BABRI MASJID?என்ற புத்தகம் தவிர ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியுள்ளார் பாபா.
நூல்கள் எழுதியதோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கைகளையும் துவக்கினர் பாபா. புனிதபோராளி பத்திரிக்கை மூலம் அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதினார்.முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை புனித போராளி மூலம் அம்பலபடுத்தினார்.பத்திரிக்கை,நூல்கள்,மேடைபேச்சு,அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு,இஸ்லாமிய பிரச்சாரம் என பல துறைகளிலும் சளைக்காமல் பணியாற்றிய பாபா சங்பரிவார்களின் கழுகு பார்வைக்கு உறுத்தலாகவே இருந்தார்.
முஸ்லிம் சமுதாய அமைப்புகள் சில பாபாவுக்கு எதிராக கழுத்தறுப்பு வேலைகள் பார்த்தாலும் அவதூறுகள் பேசினாலும் தனது பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தினார் பாபா.
ஆரவாரமான மேடை பேச்சுக்களை விட்டு அமைதியான முறையில் ஆக்கபூர்வமான வேலைகளை கவனிக்க திட்டமிட்ட பாபா முஸ்லிம் ஜமாத்துகளை ஒருங்கிணைப்பதற்கான வேலைகளை ஆரம்பித்தார்.தமிழகம் முழுவதும் ஜமாத்துகளை சந்திக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டார்.இந்நிலையில் பொள்ளாச்சியில் தனது குடும்ப நண்பர் பசவராஜ் தனபால் என்பவர் வீட்டுக்கு வந்த பாபா அவரிடம் பேசி முடித்து விட்டு வெளியில் நின்ற தனது ஜீப்பில் ஏற முற்படும்போது R.S.S பாசிச பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டார்.பல மேடைகளில் தான் இஸ்லாமிய எதிரிகளால் கொல்லப்பட்டு ஷஹித் ஆக்கபடுவேன் என்றும் அதைதான் தான் விரும்புவதாகவும் கூறி வந்த பாபா ஷஹித் அந்தஸ்தை அடைந்தார்.
பாபா கொல்லப்பட்ட செய்தி அறிந்து தமிழகமே அதிர்ந்தது.பல ஊர்களில் கடையடைப்பு,கல்லெறி சம்பவங்கள் நடந்தன.ஆயிரக்கணக்கான ஜிஹாத் கமிட்டி தொண்டர்கள்,முஸ்லிம் பொது மக்கள் புடை சூழ கொண்டு வரப்பட்ட பாபா உடல் புது ஆயக்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பாபா வின் உடலை கூறு போட்ட பாசிஸ்டுகளால் அவரின் கொள்கை முழக்கத்தை தடுக்க முடியவில்லை.இன்னும் ஒலி மற்றும் ஒளி பேழை வழியாக முஸ்லிம்கள் இருக்கும் இடமெல்லாம் ஒலித்து கொண்டே இருக்கிறது பாபாவின் குரல்.பாபாவின் முகத்தை கூட பார்க்காமல் அவரின் பேச்சுகளை கேட்டே சமுதாய சேவைக்கு வந்த இளைஞர்கள் பலர்.அவர்களில் ஒருவனாக பாபாவின் நினைவு நாளில் இந்த கட்டுரையை அவருக்கு சமர்பிக்கிறேன்.எல்லாம் வல்ல இறைவன் அவரின் செயல்களுக்கு நற்கூலி வழங்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை அவருக்கு வழங்குவானாக.ஆமின்
காந்தி பிறந்த மண்ணில் அரசியல் அகதிகளாக இசுலாமியர்கள் ! இந்த மண்ணில் இரண்டாம் தர மக்களாக இசுலாமியர்கள் நடத்த பட வேண்டும் என்று பகிரங்கமா அறிவிப்பு செய்து அதை பரப்புரையும் செய்தவர்கள் வீர் சாவர்கர், கோல்வால்கர் உள்ளிட்ட ஹிந்து துவ விரும்பிகள் . இதை நிறைவேற்ற இந்தியா முழுவதும் மறைமுகமான அரசியல் நகர்வுகளை மதவாத அமைப்புகள் மேற்க்கொண்டு வருகின்றார்கள் என்பதை நாடு முழுவதும் நடக்கும் நிகழ்வுகள் நமக்கு உணர்த்திக்கொண்டு தான் இருக்கின்றது. இசுலாமியர்கள் அசாமில் 31 % , மேற்கு வங்காளத்தில் த்தில் 25 %, பீகாரில் 18 % , உத்திர பிரதேசத்தில் 19 % , என வாழ்ந்து வரும் நிலையில் அரசியலில் அவர்களுக்கு உரிய பங்கை அளிப்பது இல்லை என்றாலும் முழுவதுமாக புறம்தள்ளி விட்டு தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் தேர்தலை சந்திப்பது இல்லை . ஆனால் குஜராத் மண்ணில்10% வாழும் இசுலாமியர்கள் அரசியல் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்ன்றார்கள் . குஜராத்தில் மாநிலத்தில் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் ஒரு இசுலாமியர் கூட நாடாளமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்படவில்லை பாரதிய ஜனதா 2002 , 2007,2012 ஆகிய தேர்தல்களில் ஒரு இசுலாமியருக்கு கூட போட்டியிடும் வாய்ப்பினை வழங்கவில்லை. நரேந்திர மோடியோடு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து குஜராத் பரிவர்தன் கட்சி என்று தொடங்கிய கேசுபாய் பட்டேல், கூட இசுலாமியர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை .மக்கள் தொகையின் அடிப்படையில் குறைந்தது 18 தொகுதிகளாவது இசுலாமியர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும் ஆனால் ஒட்டுமொத்தமாக இசுலாமியர்களை புறக்கணித்து விட்டு (182 தொகுதிகள் )தேர்தலை சந்தித்த பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்று இருக்கிறது. மதசார்பற்ற கட்சி என்று தன்னை அறிவித்து கொள்ளும் காங்கிரஸ் , 7 தொகுதிகளை மட்டுமே இசுலாமியர்களுக்கு ஒதுக்கியது ஆனால் போட்டியிட்ட அந்த 7 தொகுதிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற முடிந்து இருக்கிறது . அகமதாபாத் பகுதியில் உள்ள தாரியாபூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கயாசுதின் சேக் , தன்னை எதிர்த்த பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரை விட 2621 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் . மற்றொரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பீர்சாடா ஜாவித் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரை விட5072 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் . இதை தவிர்த்து, போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறி முன்னால் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் சபீர் கபுலிவாலா தனித்து போட்டியிட அந்த தொகுதியில் காங்கிரஸ் அறிவிப்பு செய்த சமீர் கான் , பாரதிய ஜனதா கட்சி யின் வேட்பாளர் அசோக் பாட் என்பவரிடம் வெற்றி வாய்ப்பை இழக்க நேர்ந்து உள்ளது . ( சபீர் கபுலிவாலா பெற்ற வாக்குகள் 30,513 , சமீர் கான் பெற்ற வாக்குகள் 41,727 . அசோக் பாட் பெற்ற வாக்குகள் 48058) வெற்றி பெற்ற இரண்டு இசுலாமிய சட்ட மன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு 50 லட்சத்துக்கும் குறைவானது , குஜராத்தில் தொகுதி மறு சீர் அமைப்பிற்கு பிறகு நடத்தப்பட்ட முதல் (2012) தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது . காந்தி பிறந்த மண்ணில் ( குஜராத்) சிறுபான்மையினராக வாழும் மக்களை கொன்று குவித்ததோடு அவர்களை அரசியல் அகதிகளாக்கி வேடிக்கை பார்க்கும் நரேந்திர மோடிக்கு துணைபோகும் வகையில் தான் காங்கிரஸின் அரசியல் நகர்வுகளும் உள்ளது . . நரேந்திர மோடியை போல குஜராத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இனி காங்கிரஸ் கட்சியும் இசுலாமியர்களை தேர்தலில் புறக்கணிக்க வாய்ப்புண்டு . குஜராத்தில் நரேந்திர மோடி வெற்றி பெற்ற உடனே வாழ்த்து செய்தி அனுப்பி, தன்னுடைய பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டவரை ,அவரின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்து இருக்கும் தமிழகத்து முதல்வர் ஜெயலலிதா அவர்களும் மோடியை போன்று இசுலாமியர்களை புறக்கணித்தால் அதில் வியப்பு ஏதும் இல்லை . கடந்த (2009)நாடாளமன்ற தேர்தலில் 40தொகுதிகளில் ஒரு தொகுதி கூட இசுலாமியர்களுக்கு வழங்காமல் வேட்பாளர்களை அறிவிப்பு செய்து விட்டு பிறகு எதிர்ப்புகள் வந்த சூழலில் தான் ஒரு தொகுதியை இசுலாமியருக்கு ஒதுக்கியவர் ஜெயலலிதா. அதே வேளையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுக்கப்பட்ட இரண்டு பொதுதொகுதிகளில் ஒன்றை இசுலாமியருக்கும் , மற்றொன்றை பிற்படுத்தப்பட்ட சமுகத்தில் பிறந்தவருக்கும் ஒதுக்கியது விடுதலை சிறுத்தைகள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் . குஜராத்தில் ஏன் இசுலாமியர்களுக்கு பாரதீய ஜனதா கட்சி போட்டியிட வாய்ப்பு தரவில்லை ? என்ற குற்றசாட்டிற்கு எதிர்வரும் நாடாளமன்ற தேர்தலில் 4 அல்லது 5 தொகுதிகள் இசுலாமியர்களுக்கு ஒதுக்கப்படும் என நரேந்திர மோடி கூறி இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி மாநில சிறுபான்மையினர் பிரிவு பொறுப்பளர் மஹிபு பாலி பாபா விளக்கம் தருகிறார் .. ஓடுக்கப்படும் இசுலாமியர்கள் வாழும் குஜராத் இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலம் என்று சொல்லும் போதெல்லாம் , மஹிபு பாலி பாபா போன்றவர்களை அரசியல் படுத்த காந்தி பிறந்த மண்ணில் அரசியல் அகதிகளாக இருக்கும் எம் இசுலாமிய சொந்தங்களை மீட்க மீண்டும் பிறக்க மாட்டாரா பழனி பாபா என்றே தோன்றுகிறது . . அரசியல் அதிகாரம் கை மாற ஓடுக்கப்பட்டவ்ர்கள் நிலைமாற ஒன்று கூடுவோம் !!! அ .அசோக் பொது செயலாளர் , கூடு இயக்கம்



சித்தம் கலங்குதடா
நெஞ்சம் குமுறுதடா
எங்கள் பாபாவின்
சாய்ந்த உடலைப் பார்த்து

உள்ளம் கொதிக்குதடா
இதயம் வெடிக்குதடா
எங்கள் பாபாவின்
காய்ந்த உதிரம் பார்த்து

நாடி நரம்புகள் துடிக்குதடா
வெறுப்பு வரம்பு மீறுதடா
எங்கள் பாபா மீது பாய்ந்த
கொடியவர்களை பார்த்து

இரத்தத்திற்கு இரத்தம்
பதிலுக்குப் பதில் பழிக்குப் பழி
என்று கண்கள் சிவக்குதடா
பிளந்த மார்பைப் பார்த்து

பாபாவை இழந்திருக்கின்றோம்
ஜிஹாத்தை வளர்ப்பதற்காக
பாபாவை புதைத்திருக்கின்றோம்
முஜாஹிதுகள் முளைப்பதற்காக
அவர் உடலை விதைத்திருக்கின்றோம்
ஷுஹதாக்கள் பிறப்பதற்காக.

ஜிஹாத் கமிட்டி வளர்ந்தால்
எதிரிகள் கலங்குவார்கள்
ஜிஹாத் உணர்வு மலர்ந்தால் தான்
வெறியர்கள் அடங்குவார்கள்
ஜிஹாத் முழக்கம் முழங்கினால் தான்
இந்த ஓநாய்கள் ஒடுங்குவார்கள்

உடலைத் தந்தான்
உயிரைத் தந்தான்
உதிரத்தைத் தந்தான்
உன் தலைவன்

தன் வாழ்வைத் தந்தான்
தன் வளத்தைத் தந்தான்
தன்னையே தந்தான்
உன் தலைவன்

வீரத்தைத் தந்தான்
விவேகத்தைத் தந்தான்
ரோஷத்தைத் தந்தான்
உணர்வைத் தந்தான்
உன் தலைவன்

தான் சிறையிலிருந்து
உனக்கு விடுதலையை தந்தான்
தான் இருட்டிலிருந்து
உனக்கு விடியலைத் தந்தான்
தான் காயங்களை தாங்கி
உனக்கு நியாயங்களைத் தந்தான்
தான் பிணமாய் சாய்ந்து
உனக்கு வாழ்வைத் தந்தான்
உன் தலைவன்.

நீ என்ன தந்தாய்
உப்பாய் போன
உன் கண்ணீரை தவிர
அவர் ஜனாஸாவில் தெளித்த
பன்னீரைத் தவிர.

இதுவா பாசம்
இதுவா நேசம்
இதுவா அன்பு
இதுவா அர்ப்பணிப்பு.

பாபா மீது பாசமிருந்தால்
செயலில் காட்டுங்கள்
பாபா மீது நேசமிருந்தால்
களத்தில் இறங்குங்கள்
பாபா மீது உயிரிருந்தால்
முஜாஹிதாக மாறுங்கள்
பாபா மீது அன்பிருந்தால்
சிறச்சாலைகளை
நிரப்புங்கள்.

பாபாவின் குரல்
பட்டிதொட்டிகளில்
எல்லாம் முழங்கட்டும்
பாபாவின் ஜிஹாத் கொடி
முச்சந்திகளில் எல்லாம்
பறக்கட்டும்

பாபாவின் இரத்தம்
நம் சிவந்த கண்களில்
தெரியட்டும்

பாபா வளர்த்த
தீன் படை எதிரிகளுக்கு
புரியட்டும்

பாபாவின் மூச்சு
நம் பேச்சில்
எதிரொலிக்கட்டும்
பாபாவின் வேகம்
நம் பாய்ச்சலில்
காணட்டும்

புறப்படுங்கள் தோழர்களே!
எங்கள் பாபாவின்
நேசர்களே!